Sunday, December 3, 2023
spot_img
Homeஇலங்கைஇந்தியாவின் கடற்படை சொத்துக்களை கண்காணிக்க இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்.

இந்தியாவின் கடற்படை சொத்துக்களை கண்காணிக்க இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடற்படை இருப்பு மற்றும் மூலோபாய மேற்பார்வையை எதிர்கொள்ளும் நோக்கில், இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ரேடார் தளம், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பிராந்தியத்தில் புது டெல்லியின் மூலோபாய சொத்துக்களை மதிப்பீடு செய்யும் என எக்கனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 155 கி.மீ. தொலைவில் உள்ள இலங்கையின் டோண்ட்ரா விரிகுடாவின் காடுகளில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வரை மேற்பார்வையை விஸ்தரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எச்சரிக்கையையும் மீறி கடந்த ஆண்டு, சீனக் கப்பலை எரிபொருள் நிரப்புதல் மற்றும் தளவாடப் பொருட்களுக்காக ஆறு நாட்கள் ஹம்பாந்தோட்டையில் நிறுத்த இலங்கை அனுமதித்தமை குறித்தும் இந்தியா கடும் கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular