Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைமன அழுத்தம், பொருளாதார பிரச்சனைகள் காரணமாக பொலிஸ் சேவையினை விட்டு வெளியேறியுள்ள 260 பேர்!

மன அழுத்தம், பொருளாதார பிரச்சனைகள் காரணமாக பொலிஸ் சேவையினை விட்டு வெளியேறியுள்ள 260 பேர்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 260 பேர் பொலிஸ் சேவையில் இருந்து அறிவித்தல் எதனையும் வழங்காமல் விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட்கள் என பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பலர் மன அழுத்தம், பொருளாதார பிரச்சனைகள், அதிக வேலை மற்றும் கடமையின் அழுத்தம், ஓய்வின்மை போன்ற காரணங்களால் பொலிஸ் சேவையை விட்டு விலகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இவர்கள் அனைவரையும் பொலிஸ் சேவையை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022ஆம் ஆண்டில் மாத்திரம் 900 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular