Wednesday, November 29, 2023
spot_img
Homeசினிமாபல கோடி லாபம் கொடுத்த ஹீரோவுக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. சூப்பர் ஜோடி

பல கோடி லாபம் கொடுத்த ஹீரோவுக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. சூப்பர் ஜோடி

அதிதி ஷங்கர்

கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் அதிதி ஷங்கர். முதல் படமே இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் கதாநாயகியாக அதிதி ஷங்கர் தான் நடிக்க போகிறார் என தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

சூப்பர் ஜோடி

இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை அதிதி ஷங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த திரைப்படம் தாம் கொரோனா குமார். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கபோவதாக கூறப்பட்டது. ஆனால், அதன்பின் சிம்பு இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

பல கோடி லாபம் கொடுத்த ஹீரோவுக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. சூப்பர் ஜோடி | Adhiti Shankar To Pair Up With Popular Actor

இதனால் சிம்பு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தற்போது பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க இயக்குனர் கோகுல் முடிவெடுத்துள்ளாராம். இதன் மூலம் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அதிதி ஷங்கர் ஜோடியாக சேர்ந்து நடிக்கவுள்ளனர்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய லவ் டுடே படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு பல கோடி லாபத்தை அல்லி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular