பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கோட்டா சீனிவாச ராவ். இவர் தெலுங்கு படங்களை தாண்டி தமிழ் சினிமாவிலும் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.
சமீபகாலமாக கோட்டா சீனிவாச ராவ் வயது மூப்பு காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது 75 வயதான இவர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியானது.
உருக்கம்
இந்நிலையில் இது குறித்து பேசிய கோட்டா சீனிவாச ராவ், “என்னை இந்த சோசியல் மீடியாக்கள் கொன்றுவிட்டன. என்னுடைய இறப்பு குறிப்பு வந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்”.
“நான் உகாதி பண்டிகையை கொண்டாட தயார் ஆகும் போது இது போன்ற செய்திகள் வெளியானது. இந்த வதந்தியால் என் வீட்டில் தற்போது 10 போலீசார்கள் பாதுகாப்புக்கு வந்துள்ளனர்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.