ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகும் இருக்கும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக 7 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ள ரஜினிகாந்த் ரூ. 25 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தான் தலைவர் 170. TJ ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைக்கா தயாரிக்கிறது.
தளபதிக்காக
ரஜினிகாந்தின் வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று தளபதி. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படம் 1991ஆம் ஆண்டு வெளிவந்தது.
இந்நிலையில், இப்படத்தின் பிரிமியர் காட்சிக்காக அழைப்பு விடுத்து ரஜினிகாந்த் எழுதிய லெட்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த லெட்டரின் புகைப்படம்..
