Saturday, December 9, 2023
spot_img
Homeசினிமாவிஜய் பற்றி ஒரு வார்த்தை.. நச்சுன்னு பதிலளித்த ராஷ்மிகா..!

விஜய் பற்றி ஒரு வார்த்தை.. நச்சுன்னு பதிலளித்த ராஷ்மிகா..!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, கிரிக் பார்ட்டி என்ற கன்னடம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மிகவும் பிரபலமடைந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். விஜய் – ராஷ்மிகா ராஷ்மிகா நேற்று சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, விஜய்யை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா காதல் (லவ்) என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular