Sunday, December 3, 2023
spot_img
Homeஉலகம்ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணிக்கு செல்லும் வியாஸ்காந்த்

ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணிக்கு செல்லும் வியாஸ்காந்த்

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவாகியுள்ளார்.

யாழ்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

தனது விளையாட்டை அடுத்து கட்டத்திற்கு எடுத்து செல்வதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார வழங்கிய உறுதிமொழியை அடுத்து தான் அழைப்பை ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.

எனவே தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொள்வதாகவும் விஜயகாந்த் வியாஸ்காந்த் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular