Wednesday, November 29, 2023
spot_img
Homeசினிமாராம்சரண் படத்தில் ஆர்வம் காட்டும் இயக்குனர் ஷங்கர்

ராம்சரண் படத்தில் ஆர்வம் காட்டும் இயக்குனர் ஷங்கர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்.சி.15 ஆர்சி15 படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடவுள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் குதிரை மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ராம் சரண் 15-வது படத்தை முடிக்கும் பயணத்தை உத்வேகமாக வைத்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular