Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைபுதிய நகர்ப்புற அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல் !

புதிய நகர்ப்புற அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல் !

நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தொடங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

காணிகளை அபிவிருத்தி செய்தல், கட்டட நிர்மாணம் மற்றும் மாற்றியமைத்தல், இணக்கச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட விதிமுறைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என அமைச்சு கூறுகிறது.

இலங்கையில் உள்ள மொத்த உள்ளூராட்சிகளின் எண்ணிக்கை 341 ஆகும். இதில் 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் இதற்குள் அடங்குகின்றன.

RELATED ARTICLES

Most Popular