Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைதிட்டமிட்டபடி தேர்தல் நடைபெறாது – மஹிந்த தேசப்பிரிய

திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறாது – மஹிந்த தேசப்பிரிய

திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடைந்த பின்னரும் பதவிக்காலத்தை நீடிப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே தற்போது குறித்த தேர்தலை நடத்தாதிருப்பதை காட்டிலும் இது பாரிய குற்றம் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உள்ளூராட்சி மன்ற தேரத்ல் நடத்தப்படவேண்டும் என மஹிந்த தேசப்பிரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular