Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைஜனாதிபதி அலுவலகத்தில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் – புதிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் !

ஜனாதிபதி அலுவலகத்தில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் – புதிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் !

பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு தாம் அழைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமை தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் நீல் பண்டார ஹபுஹின்ன கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஹபுஹின்னவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்க வேண்டாம் என அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியதற்காக இவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்

RELATED ARTICLES

Most Popular