Thursday, November 30, 2023
spot_img
Homeவிளையாட்டுசவுதி அரேபியா பர்முயுலா-1 கார்பந்தயம்: செர்ஜியோ பெரெஸ் சம்பியன்!

சவுதி அரேபியா பர்முயுலா-1 கார்பந்தயம்: செர்ஜியோ பெரெஸ் சம்பியன்!

சவுதி அரேபியா பர்முயுலா-1 கார்பந்தய சுற்றில், ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ‘பார்முயுலா 1’ கார் பந்தயத் தொடர், 23 சுற்றுகளாக ஒவ்வொரு நாடுகளில் நடைபெறுகின்றன.

இதன்படி, நடப்பு ஆண்டின் இரண்டாவது சுற்றான சவுதி அரேபியா பர்முயுலா-1 கார்பந்தயம், நேற்று ஜெடா கார்னிச் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 308.45 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் கடந்த முதல் சுற்றில் இரண்டாவது இடத்தை பிடித்த ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 21 நிமிடங்கள் 14.894 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

5.355 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 19 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார். வெர்ஸ்டாப்பன், கடந்த முதல் சுற்றில் முதலிடத்தை பிடித்திருந்தார்.

20.728 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ஆஸ்டன் மார்டின் அணியின் வீரரான பெர்னாண்டோ அலோன்சோ, மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு சுற்றுகளின் முடிவுகளின் அடிப்படையில், மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஒரு சம்பியன் பட்டத்துடன் 44 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செர்ஜியோ பெரெஸ், ஒரு சம்பியன் பட்டத்துடன் 43 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் பெர்னாண்டோ அலோன்சோ 30 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரின் மூன்றாவது சுற்றான அவுஸ்ரேலியன் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி மெல்பேர்ன் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES

Most Popular