Saturday, December 9, 2023
spot_img
Homeஉலகம்கனடாவில் வேலை தேடுபவரா நீங்கள்..! இந்த துறைகளுக்கு அதிக தேவை

கனடாவில் வேலை தேடுபவரா நீங்கள்..! இந்த துறைகளுக்கு அதிக தேவை

கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, தனது வெளிநாட்டு சேவை அலுவலகங்களுக்கான ஊழியர்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வெளிநாட்டு சேவை அலுவலகங்களில் இருக்கும் காலியிடங்களை நிரப்ப ஆட்களைத் தேடுகிறது கனடா.

தகுதியுடையோர் தேர்வு செய்யப்படும் நிலையில், அவர்கள் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்தல் வெளிநாட்டு சேவை அலுவலர்களாக (Migration Foreign Service Officers) பணிக்கமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள், 2023, ஜூன் மாதம் 30ஆம் திகதி ஆகும்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் (bachelor’s degree) இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதேநேரத்தில் பிரெஞ்சு மொழி தெரியாதவர்கள் கவலைப்படவேண்டாம். அவர்கள் பணிக்காக தேர்வு செய்யப்பட்டால், அவர்களுக்கு மொழிப்பயிற்சியும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் மொழி ஒன்று தெரிந்திருப்பதுடன், அனுபவமும் இருந்தால் இன்னமும் நல்லது. ஆனால், அது கட்டாயமல்ல.

இந்த பணிக்கான ஊதியம், ஆண்டுக்கு 72,292 முதல் 91,472 டொலர்கள் வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்

RELATED ARTICLES

Most Popular