இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், முகமது சமி, சிராஜ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக ஒரு அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் 4 பேர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். இதற்கு முன்னதாக, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக 4 பேர் டக் அவுட்டில் வெளியேறியுள்ளனர். 1995 – இந்தியா – பாகிஸ்தான் – ஷார்ஜா 1997 – இந்தியா – பாகிஸ்தான் – ஹைதராபாத் 2009 – இந்தியா – ஆஸ்திரேலியா – கவுகாத்தி 2011 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – நாக்பூர் 2017 – இந்தியா – இலங்கை – தர்மசாலா 2023 – இந்தியா – ஆஸ்திரேலியா – விசாகப்பட்டினம் இதன் முலமாக 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர்களில் 4 பேர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். இந்தியாவில் இந்தியா எடுத்த குறைந்தபட்ச ரன்கள்: 1986 – இந்தியா – இலங்கை – 78 ரன்கள் 1993 – இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 100 ரன்கள் 2017 – இந்தியா – இலங்கை – 112 ரன்கள் 2023 – இந்தியா – ஆஸ்திரேலியா – 117 ரன்கள் 1987 – இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 135 ரன்கள்