Saturday, December 9, 2023
spot_img
Homeஉலகம்அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்குமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் உத்தரவு!

அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்குமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் உத்தரவு!

அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்கம் செய்யுமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார்.

அரசு பதவிகளில் நியமிக்கப்பட்ட மகன்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களை அதிகாரிகள் மாற்ற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் உறவினர்களை பணியமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுபவமில்லாத பணியாளர்கள் தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் 2021இல் ஆட்சிக்கு வந்தபோது சில மூத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர், மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

RELATED ARTICLES

Most Popular