Saturday, December 9, 2023
spot_img
Homeசினிமாஅடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு நகரும் புஷ்பா படக்குழு!

அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு நகரும் புஷ்பா படக்குழு!

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாகவும் இதற்காக அவர் 10 நாட்கள் தனது கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஹைதராபாத் மற்றும் வைசாக் படப்பிடிப்பு முடிந்ததாகவும், அடுத்த கட்டப் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular