Wednesday, November 29, 2023
spot_img
Homeஉலகம்ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் போலந்தில் குழுவொன்று கைது!

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் போலந்தில் குழுவொன்று கைது!

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு பிரஜைகள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலந்து அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனுக்கு உதவிகளை வழங்கப் பயன்படுத்தப்படும் போக்குவரத்து உள்கட்டமைப்பை ஒளிப்பதிவு செய்ய ரகசிய கேமராக்களை பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்த உளவு மோதல் தீவிரமடைந்துள்ளது.

போலந்து உக்ரைனின் வலுவான நட்பு நாடுகளில் ஒன்றாகும் மற்றும் அதன் பாதுகாப்புப் படையினர் கடந்த பெப்ரவரி மாதம் படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் பலரைக் கைது செய்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular