Sunday, December 3, 2023
spot_img
Homeசினிமாரஜினியுடன் இணையும் செந்தில்.. எந்த படத்தில் தெரியுமா..?

ரஜினியுடன் இணையும் செந்தில்.. எந்த படத்தில் தெரியுமா..?

2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் ‘ஓ சாத்தி சால்’ என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். லால் சலாம் படக்குழு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லால் சலாம் இந்நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் மூத்த காமெடி நடிகர் செந்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. படையப்பா படத்தில் ரஜினி மற்றும் செந்திலின் காமெடி காட்சி இன்று வரை ரசிக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் இருவரும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular