Saturday, December 9, 2023
spot_img
Homeசினிமாபடப்பிடிப்பில் பிரச்சினை.. வடிவேலுவால் கடுப்பான பிரபல இயக்குனர்..?

படப்பிடிப்பில் பிரச்சினை.. வடிவேலுவால் கடுப்பான பிரபல இயக்குனர்..?

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். வடிவேலு இதைத்தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது நடிகர் வடிவேலு பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி -2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வடிவேலு -பி.வாசு இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுக்கும் பி.வாசுவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் இதனால் கோபமடைந்த இயக்குனர் பி.வாசு நடிக்க விருப்பம் இல்லாவிட்டால் சென்று விடலாம் என்று வடிவேலுவிடம் கூறியதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலை இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை.

RELATED ARTICLES

Most Popular