Saturday, December 9, 2023
spot_img
Homeஉலகம்கனடாவில் பாரிய அளவு வீழ்ச்சியடைந்த வீட்டு விலைகள்!

கனடாவில் பாரிய அளவு வீழ்ச்சியடைந்த வீட்டு விலைகள்!

கனடாவில் வீட்டு விற்பனையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு கால ஒப்பீட்டு அடிப்படையில் கடந்த மாதத்தில் வீட்டு விற்பனை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதிலும் புதிதாக வீடுகள் பதிவு செய்யப்படும் சந்தர்ப்பங்களும் வீட்டு விலைகளும் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சராசரி வீட்டு விலை

கனடாவில் கடந்த மாதம் சராசரி வீட்டு விலை 66,6437 டொலர்கள் எனவும், ஓராண்டுக்கு முன்னதாக இந்த தொகை 81, 6578 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது பெப்ரவரி மாதத்தில் வீட்டு விற்பனை 2.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular