Wednesday, November 29, 2023
spot_img
Homeவிளையாட்டுஇந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்: மெட்வேடவ், மரியா சக்கரி- சபலெங்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்: மெட்வேடவ், மரியா சக்கரி- சபலெங்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிகளில், டேனில் மெட்வேடவ், மரியா சக்கரி மற்றும் அரினா சபலெங்கா ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ் மற்றும் ஸ்பெயினின் அலெக்சாண்டர் டேவிடோவிச் ஃபோகினா மோதினர்.

இப்போட்டியில் டேனில் மெட்வேடவ், 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், கிரேக்கத்தின் மரியா சக்கரி, செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், மரியா சக்கரி, 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

மற்றொரு காலிறுதிப் போட்டியில், பெலராஸின் அரினா சபலெங்கா, அமெரிக்காவின் இளம் வீராங்கனையான கோகோ கோஃப்புடன் மோதினார்.

இப்போட்டியில், அரினா சபலெங்கா, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்

RELATED ARTICLES

Most Popular