Sunday, December 3, 2023
spot_img
Homeசினிமாதீபிகா படுகோனின் பெயரை மாற்றி கூறிய வெளிநாட்டு ஊடகங்கள்!

தீபிகா படுகோனின் பெயரை மாற்றி கூறிய வெளிநாட்டு ஊடகங்கள்!

அமெரிக்காவில் நடந்த 95-வது ஒஸ்கர் விருது வழங்கும் விழாவில் தீபிகா கலந்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.

அவர் இந்த விழாவில் பலரது கண்களைக் கவரும் வகையில் வித்தியாசமான உடை அலங்காரத்தில் வந்து கலந்து கொண்டார். அவர்தான் எந்த திரைப்படங்களுக்கு ஒஸ்கர் விருது கிடைக்கப்போகிறது என்பதை அறிவிப்பும் செய்தார்.

தீபிகா படுகோனே இந்த நிலையில் பல்வேறு உலகப்புகழ் பெற்ற ஊடகங்கள் தீபிகா படுகோனே உடையையும் அவரது ஸ்டைலையும் புகைப்படங்களாக எடுத்தனர்.

இதை மறுநாள் வெளியிட்ட புகழ் பெற்ற ஊடகங்கள் தீபிகா படுகோனேவை மறந்து அவரை பிரேசிலிய அழகி கமிலா ஆசல்வ்ஸ் என்று குறிப்பிட்டனர்.

இதைப்பார்த்துப் பிரபலமான வோக் பத்திரிகையும் தீபிகாவின் பெயரை மாற்றி வெளியிட்டது. இது மறுநாள் ஓஸ்கர் கொண்டாட்டங்களில் எதிரொலித்தது என்கிறார்கள்.

RELATED ARTICLES

Most Popular