காலநிலை மாற்றங்களினால் கனடாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அந்நாட்டு உளவுப்பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் சுபீட்சத்திற்கும், தேசியப்பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
கடல் மட்டம் உயர்வடைவதன் காரணத்தினால் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அட்லான்டிக் மாகாணங்களின் சில பகுதிகளை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய பாதுகாப்பு புலனாய்வு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வுகளின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
காலநிலை மாற்றம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.