Sunday, December 3, 2023
spot_img
Homeஉலகம்கனடாவில் விருது வழங்கும் நிகழ்வில் அரை நிர்வாணமாக தோன்றிய யுவதி!!

கனடாவில் விருது வழங்கும் நிகழ்வில் அரை நிர்வாணமாக தோன்றிய யுவதி!!

கனடாவில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அரை நிர்வாணமாக தோன்றிய யுவதி ஓருவரினால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எட்மோன்டனில் நடைபெற்ற ஜூனோ விருது வழங்கும் நிகழ்வில் இவ்வாறு குழப்ப நிலை உருவாகியுள்ளது.

பிரபல பாடகி Avril Lavigne மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, பெண் ஒருவர் அரை நிர்வாணமாக மேடையில் தோன்றி கிறின்பெல்ட் எனப்படும் பாதுகாக்கப்பட்ட வலயத்தில் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுப்பதனை எதிர்த்துள்ளார்.

மேலாடையின்றி தோன்றிய குறித்த பெண், உடலில் கிறின்பெல்ட் திட்டம் அபிவிருத்தி செய்வதனை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை எதிர்க்கும் வகையில் கிறின்பெல்ட் பகுதியை பாதுகாக்குமாறு கோரி உடலில் வாசகமொன்றை எழுதியிருந்தார்.

ஒன்றாரியோவின் கிறின்பெல்ட் பகுதி என்ற பாதுகாக்கப்பட்ட வலயத்தில் 7400 ஏக்கர் காணி வீடமைப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பாதுகாக்கப்பட்ட பகுதியை வீடமைப்பிற்காக ஒதுக்க வேண்டாம் என சுற்றாடல் ஆர்வலர்கள் கோரி வருகின்றனர். 

RELATED ARTICLES

Most Popular