Thursday, November 30, 2023
spot_img
Homeஉலகம்கனடாவில் பாதசாரிகள் மீது வாகனத்தைச் செலுத்தியதில் ஏற்பட்ட அவலம்

கனடாவில் பாதசாரிகள் மீது வாகனத்தைச் செலுத்தியதில் ஏற்பட்ட அவலம்

கனடாவில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே வாகனத்தை செலுத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் Amqui பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்து சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். பிக்கப் ரக வாகனம் ஒன்று பாதசாரிகள் மீது மோதுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தின் சாரதி வேண்டுமென்றே பாதசாரிகள் மீது வாகனத்தை மோதச்செய்து உள்ளதாக தென்படுகின்றது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

காயம் அடைந்தவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்துடன் தொடர்புடைய 38 வயதான வாகன சாரதி போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.

வேண்டுமென்றே வாகனம் மோதச் செய்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறு எனினும் இந்த சம்பவம் பயங்கரவாத செயலாகவோ அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய விவகாரமாகவோ அமையப் பெறவில்லை என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

RELATED ARTICLES

Most Popular