Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைவிமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட மஹிந்தானந்த – விசாரணைகள் ஆரம்பம் !

விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட மஹிந்தானந்த – விசாரணைகள் ஆரம்பம் !

வெளிநாட்டு பயணம் ஒன்றிற்காக விமான நிலையத்தை சென்றடைந்த மஹிந்தானந்த அளுத்கமகேவை மீண்டும் திருப்பி அனுப்பிய சம்பவம் இடமபெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் கடவுச்சீட்டு தரவுகளுடன் தொடர்புடைய வேறு ஒருவரின் தரவுகள் உள்ளடக்கப்பட்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த தகவல்களை கணினியில் உள்ளீடு செய்த அதிகாரியின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கை கணினி அவசர பதில் பிரிவு என்பன விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular