Wednesday, November 29, 2023
spot_img
Homeவிளையாட்டு4 ஆம் நாள் ஆட்டம் நிறைவு : ஒரு விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து

4 ஆம் நாள் ஆட்டம் நிறைவு : ஒரு விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இரண்டாவது இன்னிஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன் பிரகாரம் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 355 ஓட்டங்களையும் நியூசிலாந்து அணி 373 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி, சகல விக்கெட்களையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் 9 விக்கெட்கள் கைவசம் இருக்க இன்னும் 257 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு நாளை நியூசிலாந்து அணி இறுதி நாளை எதிர்கொள்ளவுள்ளது.

RELATED ARTICLES

Most Popular