Sunday, December 3, 2023
spot_img
Homeஉலகம்மாரடைப்பால் இளம் வயது கால்பந்து வீரர் மரணம்!!!

மாரடைப்பால் இளம் வயது கால்பந்து வீரர் மரணம்!!!

போட்டியின் போது மைதானத்தில் முஸ்தபா சைல்லா திடீரென கீழே விழுந்தார். மாரடைப்பால் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது கோஸ்ட்: ஐவரி கோஸ்ட் நாட்டில் அபிட்ஜான் மைதானத்தில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டில் அந்நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் முஸ்தபா சைல்லா ரேசிங் கிளப் அணிக்காக விளையாடினார். இந்நிலையில், கோல் போஸ்ட் அருகில் விளையாடிக் கொண்டிருந்த முஸ்தபா சைல்லா திடீரென மைதானத்திலே கீழே சரிந்து விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் முஸ்தபா சைல்லா மாரடைப்பால் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த வீரருக்கு வயது 21 ஆகும். கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து கால்பந்து வீரர் உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular