கனேடிய மக்கள் எந்த நாட்டை எதிரியாக பார்க்கின்றார்கள் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடா, சீனாவை எதிரியாக அல்லது அச்சுறுத்தலாக நோக்க வேண்டுமென மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Angus Reid Institute நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சீனாவை அச்சுறுத்தலாக கருதி கனேடிய அரசாங்கம் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டுமென மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சுமார் 40 வீதமான கனேடியர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய 12 வீதமானவர்கள் மட்டுமே சீனாவை நட்பு நாடாக பார்க்க வேண்டுமென கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, ரஸ்யாவைவும் அச்சுறுத்தலாக நோக்க வேண்டுமென கனேடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.