ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. இப்படத்திற்கு பின் தொடர்ந்து நடித்து வந்த இவர் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.
பின் சில படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், தனி ஒருவன் படத்தின் மூலம் மீண்டும் அந்த முன்னணி அந்தஸ்தை பெற்றார்.
மேலும் தற்போது பொன்னியின் செல்வனில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த ஜெயம் ரவிக்கு பாராட்டுக்கள் பல குவித்தன.
இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள அகிலன் திரைப்படம் வருகிற 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படம் மட்டுமின்றி இந்த ஆண்டு இவர் நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
சிறு வயது புகைப்படம்
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவியின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த அன்ஸீன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
