தனுஷ்
நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார். அவர்கள் சட்டப்படி விவாகரத்து இன்னும் பெறவில்லை என கூறப்பட்டாலும் அவர்கள் இருவரும் வெவ்வேறு ட்ராக்கில் பயணிக்க தொடங்கிவிட்டனர்.
தனுஷ் அவரது படங்களில் பிசியாக இருக்க, ஐஸ்வர்யா தனது பிட்னெஸ் மீது அதிகம் அக்கறை காட்டி ஒர்கவுட் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார். அவர் ஒர்கவுட் வீடியோக்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அது மட்டுமின்றி ஐஸ்வர்யா லால் சலாம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
மகனுடன் தனுஷ்
ஐஸ்வர்யா சமீபத்தில் மகன்கள் உடன் பள்ளி ஸ்போர்ட்ஸ் டே விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அவை வைரல் ஆகின.
இந்நிலையில் தற்போது தனுஷ் மகனுடன் எடுத்து இருக்கும் செல்பி புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது.
