Saturday, December 9, 2023
spot_img
Homeசினிமாநீயா நானா நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய கோபிநாத்.. வெளிவந்த வீடியோ

நீயா நானா நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய கோபிநாத்.. வெளிவந்த வீடியோ

நீயா நானா

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. ஏன் விஜய் டிவியின் அடையாளங்களில் ஒன்று கூட நீயா நானா என்று கூறலாம். அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனி இடத்தை இந்த நிகழ்ச்சி பிடித்துள்ளது.

நீயா நானா நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய கோபிநாத்.. வெளிவந்த வீடியோ | Gopinath Walk Out From Neeya Naana

இந்த நிகழ்ச்சியை பிரபல முன்னணி தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து பல சுவாரஸ்யமான தலைப்பில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இந்த வாரம், திருமணத்திற்கு பிறகு அம்மா பேச்சை கேட்டு நடக்கும் பெண்கள் – அப்பெண்களின் கணவர்கள் எனும் தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

இதில், பெண்கள் ஏன் திருமணத்திற்கு பிறகு அம்மா பேச்சை கேட்டு உங்கள் கணவர் அணியும் உடையில் இருந்து இப்படி தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது வரை முடிவு செய்கிறீர்கள் என விவாதம் நடந்தது.

கோபிநாத் வெளியேற்றம்

இதற்க்கு பதிலளித்த பெண்கள் தங்களுடைய தாய் பாசத்தில் அப்படி சொல்கிறார்கள் என கூறினார்கள். இதன்பின் கோபிநாத், அப்போது உங்கள் கணவரின் தாய், அதாவது உங்களுடைய மாமியார் எதாவது சொன்னால் மட்டும் ஏன் ஏற்க மறுக்குறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு மறுபடியும் முதலில் இருந்து தங்களுடைய அம்மா பாசத்தில் சொல்கிறார்கள் என ஆரம்பித்த பெண்களால் நொந்துபோன கோபிநாத், நான் நிகழ்ச்சியில் இருந்து ரிட்டைர் ஆகிறேன் என்று கூறிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதிலேயே விளையாட்டாக வெளியேறினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular