சவுதி லீக்கிற்காக பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர் விருதினை கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார்.
கோல் மழை பொழியும் ரொனால்டோ
கடந்த 3ஆம் திகதி நடந்த அல்-படின் அணிக்கு எதிரான போட்டியில் 1-3 என்ற கணக்கில் அல்-நஸர் அணி அபார வெற்றி பெற்றது. இதற்கு முன்பாக நடந்த டமக் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார்.

அவர் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 8 கோல்கள் அடித்தார். இதன்மூலம் Roshn சவுதி லீக்கில் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர் விருதை ரொனால்டோ வென்றார்.
ரொனால்டோவின் பதிவு
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘Roshn சவுதி லீக்கில் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்றதில் மகிழ்ச்சி. பலவற்றில் நம்பர் 1 ஆக இருப்பதாக நம்புகிறேன்! அல் நஸர் அணியில் அங்கம் வகித்ததில் பெருமை கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
விருதை வென்ற ரொனால்டோவுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதள வாயிலாக மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.