Sunday, December 3, 2023
spot_img
Homeசினிமாவிவாகரத்திற்கு பிறகு தனுஷ் என்னிடம் கூறிய விஷயம் இதுதான்- செல்வராகவன் ஓபன் டாக்

விவாகரத்திற்கு பிறகு தனுஷ் என்னிடம் கூறிய விஷயம் இதுதான்- செல்வராகவன் ஓபன் டாக்

தனுஷ்-செல்வராகவன் 

தமிழ் சினிமாவில் அண்ணன் இயக்குனராகவும், தம்பி நடிகராகவும் நுழைந்து பெரிய சாதனைகள் செய்துள்ளார்கள்.

இவர்களது கூட்டணியில் வந்த படங்கள் எல்லாமே செம ஹிட் தான், அடிக்கடி இவர்கள் இணைந்து படம் எடுக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

அண்மையில் தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியாகி செம வசூல் வேட்டை நடத்தியது, விமர்சனங்களும் கொஞ்சம் கலவையாக தான் இருந்தது.

அதேபோல் செல்வராகவன் நடித்த பகாசூரன் திரைப்படமும் வெளியாகி நன்றாக ஓடியதோடு சில சர்ச்சைகளையும்ச சந்தித்தது.

செல்வராகவன் பேட்டி

பகாசூரன் பட ரிலீஸின் போது செல்வராகவன் நிறைய பேட்டிகள் கொடுத்து வந்தார்.

அப்போது ஒரு பேட்டியில், எனக்கு சோனியாக அகர்வாலுடன் விவாகரத்து பெற்றபோது தனுஷ் என்னிடம் வந்து, இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டாம், கடவுள் உனக்கு நல்ல வாய்ப்பை கொடுத்திருகிறார்.

இப்படியே இருந்து விடு “சிங்கிளாகவே” வாழ்நாள் முழுவதும் இரு என கூறினார். 

ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது, கீதாஞ்சலி எனது வாழ்க்கையை மாற்றிவிட்டார் என செல்வராகவன் கூறியிருக்கிறார்.

RELATED ARTICLES

Most Popular