Wednesday, November 29, 2023
spot_img
Homeஉலகம்மொத்தம் 60 மில்லியன் டொலர்... கனேடிய பெண்ணின் மறக்க முடியாத தருணம்

மொத்தம் 60 மில்லியன் டொலர்… கனேடிய பெண்ணின் மறக்க முடியாத தருணம்

ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் லொட்டரியில் 60 மில்லியன் டொலர் பரிசாக வென்றதை அறிந்து உடல் மொத்தம் ஸ்தம்பித்துப் போனதாக தெரிவித்துள்ளார்.

மார்க்கம் பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்றில் பணியாற்றிவரும் Lai Ching Yau என்பவரே Lotto Max லொட்டரியில் 60 மில்லியன் டொலர் பரிசாக வென்றவர்.

சம்பவம் அறிந்து தமது உடல் மொத்தம் ஸ்தம்பித்துப் போனது எனவும், ஒரு நொடி எதையும் யோசிக்கவோ உணரவோ என்னால் முடியாமல் போனது என்றார்.

மொத்தம் 60 மில்லியன் டொலர்... கனேடிய பெண்ணின் மறக்க முடியாத தருணம் | Ontario Caregiver Won Lotto Max Jackpot

ஜனவரி 17ம் திகதி தமது அலைபேசியில் வெற்றி இலக்கங்களை உறுதி செய்த அவர், தமது குடும்பத்தினர் இதை உறுதி செய்ய வேண்டும் என நம்ப முடியாமல் அவர்களை அழைத்து, சரிபார்க்க சொன்னதாகவும் Lai Ching Yau தெரிவித்துள்ளார்.

ஆனால் குடும்பத்தினர் மொத்தமாக அந்த தகவலை உறுதி செய்ததுடன், தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதாகவும் Lai Ching Yau தெரிவித்துள்ளார்.

மேலும், தமது குடும்பத்தினருடன் வெளியே உணவருந்த செல்ல வேண்டும் எனவும், அப்போது எதிர்கால திட்டம் குறித்து விவாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, குடியிருப்பு ஒன்றை வாங்கும் திட்டம் தமக்கு இருப்பதாகவும் Lai Ching Yau தெரிவித்துள்ளார்.  

RELATED ARTICLES

Most Popular