Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைஜனாதிபதியால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்: பந்துல நம்பிக்கை!

ஜனாதிபதியால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்: பந்துல நம்பிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக போக்குவரத்து துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது, ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க அனைத்து சவால்களையும் பொறுப்பேற்ற ஆறுமாத காலங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் காரணிகளுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் பொருளாதார காரணிகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வரி கொள்கைக்கு எதிராக தற்போது போர்கொடி உயர்த்தும் தொழிற்சங்கத்தினர் நடுத்தர மக்களின் பொருளாதார நிலைமை குறித்து அவதானம் செலுத்தவில்லை எனவும் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைவரும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

Most Popular