Sunday, December 3, 2023
spot_img
Homeஇலங்கைவவுனியாவில் மருமகன் தாக்கி மாமியார் உயிரிழப்பு- மனைவி கவலைக்கிடம்!

வவுனியாவில் மருமகன் தாக்கி மாமியார் உயிரிழப்பு- மனைவி கவலைக்கிடம்!

வவுனியா பெரியஉலுக்குளம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளாகி மாமியார்சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றைய தினம்காலை கணவனிற்கும் மனைவிற்கும்  இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

அது முற்றியநிலையில் வீட்டில் இருந்த கோடாலி மற்றும் கத்தியை கொண்டு கணவன்  மனைவிமீது தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.

இதனைதடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவியின் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மனைவி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பெரியஉலுக்குளம் பகுதியை சேர்ந்த டிபி அமராவதி (வயது60), என்ற பெண் பலியானதுடன் அவரது மகளான துலிகா ரத்தினசிறி (வயது37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

தாக்குதலை முன்னெடுத்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக உலுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular