Wednesday, November 29, 2023
spot_img
Homeஉலகம்பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டி: மாலனின் சதத்தின் துணையுடன் இங்கிலாந்து வெற்றி!

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டி: மாலனின் சதத்தின் துணையுடன் இங்கிலாந்து வெற்றி!

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

டாக்காவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 47.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சாந்தோ 58 ஓட்டங்களையும் மொஹமதுல்லா 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர், மார்க் வுட், மொயின் அலி மற்றும் அடில் ராஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் மற்றும் வில் ஜெக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 210 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 48.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டாவிட் மாலன் ஆட்டமிழக்காது 114 ஓட்டங்களையும் அடில் ராஷித் ஆட்டமிழக்காது 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், தைஜூல் இஸ்லாம், 3 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன் 2 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் மற்றும் டஸ்கின் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 145 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 8 பவுண்ரிகள் அடங்களாக, ஆட்டமிழக்காது 114 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டாவிட் மாலன் தெரிவுசெய்யப்பட்டார்.

RELATED ARTICLES

Most Popular