ராம் சரண்
நடிகர் ராம் சரண் தற்போது அமெரிக்காவில் தான் இருக்கிறார். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்த RRR படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. படம் ஆஸ்கார் ரேஸில் இருக்கும் நிலையில் விருது கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
Hollywood Critics Association விருது விழாவில் சமீபத்தில் RRR படத்திற்கு ஐந்து விருதுகள் கிடைத்தது. நடிகர் ராம் சரண் அந்த விருது விழாவுக்கு பிறகு பல மீடியாக்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

மனைவிக்கு பிரசவம்
திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து தற்போது ராம் சரணின் மனைவி கர்பமாக இருக்கிறார். தற்போது அமெரிக்காவில் அளித்த பேட்டியில் ராம் சரண் gynaecologist Dr Jennifer Ashton என்பவரிடம் consultationக்கு செல்ல இருப்பதாக கூறினார்.
ராம் சரண் பேசியதை பார்த்தால் பிரசவம் அமெரிக்காவில் தான் நடக்கும் என தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது ராம் சரண் மனைவி ட்விட்டரில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
பிரசவம் இந்தியாவில் தான் நடைபெறும் என குறிப்பிட்டு, ஒரு பிரபல தனியார் மருத்துவமனை பெயரை குறித்து இருக்கிறார்.