Saturday, December 9, 2023
spot_img
Homeவிளையாட்டுபிறந்தநாளில் கோல் அடித்த இளம் வீரர்! முதலிடத்தைப் பிடித்த அணி

பிறந்தநாளில் கோல் அடித்த இளம் வீரர்! முதலிடத்தைப் பிடித்த அணி

நேற்று நடந்த பண்டஸ்லிகா தொடர் போட்டியில் பாயர்ன் முனிச் அணி அணி 3-0 என்ற கோல் கணக்கில் யூனியன் பெர்லின் அணியை வீழ்த்தியது.

பாயர்ன் முனிச் ஆதிக்கம்

அல்லியன்ஸ் அரேனா மைதானத்தில் நடந்த போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் யூனியன் பெர்லின் அணிகள் மோதின.

தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பாயர்ன் முனிச் அணியில், ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் எரிக் மாக்ஸிம் கோல் அடித்தார்.

பிறந்தநாளில் கோல் அடித்த இளம் வீரர்! முதலிடத்தைப் பிடித்த அணி | Bayern Munich First Place Again Musiala Bday Goal

அதனைத் தொடர்ந்து அந்த அணியின் கிங்ஸ்லி கோமன் 40வது நிமிடத்தில் கோல் அடித்தார். பின்னர் 45+1வது நிமிடத்தில் பயார்ன் முனிச் அணியின் இளம் வீரர் ஜமல் மியூசியாலா அபாரமாக கோல் அடித்தார்.

ஜமல் மியூசியாலா/Jamal Musiala

@REUTERS/Angelika Warmuth

ஜமல் மியூசியாலா

தனது 20வது பிறந்தநாளை கொண்டாடிய அதே நாளில் ஜமல் மியூசியாலா கோல் அடித்தது அவருக்கு சிறப்பாக அமைந்தது. இரண்டாம் பாதியில் தடுப்பாட்டம் ஆடிய யூனியன் பெர்லின் கடைசி வரை கோல் அடிக்காததால், பயார்ன் முனிச் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜமல் மியூசியாலா, ‘சிறந்த பிறந்தநாள் வெற்றி – உங்கள் அனைவரின் ஆதரவு மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

ஜமல் மியூசியாலா/Jamal Musiala

@AP

இந்த வெற்றியின் மூலம் பயார்ன் முனிச் அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது. டோர்ட்மண்ட் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.  

RELATED ARTICLES

Most Popular