Thursday, November 30, 2023
spot_img
Homeஉலகம்கிரேக்கத்தில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ..

கிரேக்கத்தில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ..

கிரேக்கத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிக்கிக்கொண்ட பயணிகள்

குறித்த சம்பவத்தில் சுமார் 100 பேர்கள் வரையில் காயமடைந்துள்ளதாகவும், பலர் உயிருக்கு போராடுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், தடம் புரண்ட பெட்டிகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பயந்துபோன பயணிகள் அதில் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கிரேக்கத்தில் பதறவைக்கும் சம்பவம்... பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்: உயிருக்கு போராடும் பலர் | Greece Train Collide People Feared Dead

@AP

ஏதென்ஸுக்கு வடக்கே சுமார் 235 மைல் தொலைவில் உள்ள டெம்பே என்ற பகுதியிலேயே நள்ளிரவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மோதியதில் குறைந்தது மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறார்கள் உட்பட மொத்தம் 85 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக இதுவரை வெளியான தகவலில் தெரிய வந்துள்ளது. இதில் சுமார் 25 பேர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறுகின்றனர். பயணிகள் ரயிலில் 350 பயணிகளுக்கும் மேல் சம்பவத்தின் போது பயணித்துள்ளனர்.

கிரேக்கத்தில் பதறவைக்கும் சம்பவம்... பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்: உயிருக்கு போராடும் பலர் | Greece Train Collide People Feared Dead

@reuters

சிதைந்த முதல் இரண்டு பெட்டிகள்

ரயில்கள் இரண்டும் பலமாக மோதியுள்ளது என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், மோதலின் தீவிரம் காரணமாக முதல் இரண்டு பெட்டிகள் சிதைந்து போயுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டு தீவிர நடவடிக்கையில் உள்ளனர். மட்டுமின்றி, ராணுவத்தினரையும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மோசமான இந்த விபத்துக்கு காரணம் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

RELATED ARTICLES

Most Popular