Sunday, December 3, 2023
spot_img
Homeகனடாஒன்ராறியோவில் திரும்பப் பெறப்படும் ஒரு குறிப்பிட்ட சாக்லேட்: கனடா சுகாதார அமைப்பு அறிவிப்பு

ஒன்ராறியோவில் திரும்பப் பெறப்படும் ஒரு குறிப்பிட்ட சாக்லேட்: கனடா சுகாதார அமைப்பு அறிவிப்பு

உணவுப்பொருட்களே ஒவ்வாமையை ஏற்படுத்துவதால் பாதிக்கப்படும் மக்கள் பலர் இருக்கிறார்கள்.

நட்ஸ் ஒவ்வாமையால் உயிரிழந்தவர்கள் குறித்தும், பால் பொருட்கள் ஒவ்வாமையால் பால் பொருட்களையே முற்றிலும் ஒதுக்கவேண்டிய நிலைமைக்கு ஆளாகுவோர் குறித்தும் அவ்வப்போது செய்திகளைக் கேள்விப்பட்டுவருகிறோம்.

அவ்வகையில், சாக்லேட் உறையில் கொடுக்கப்பட்ட பொருட்கள் தவிர்த்து கூடுதலாக ஒரு பொருள் சேர்க்கப்பட்ட Salento Organics brand டார்க் சாக்லேட்கள் திரும்பப் பெறப்பட்டுவருகின்றன.

இவ்வகை சாக்லேட்கள் ஒன்ராறியோவில் விற்கப்படுகின்றன.

ஒன்ராறியோவில் திரும்பப் பெறப்படும் ஒரு குறிப்பிட்ட சாக்லேட்: கனடா சுகாதார அமைப்பு அறிவிப்பு | Recall Issued For Specific Brand Of Chocolate

தற்போது, இந்த சாக்லேட்களில் பால் கலந்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவை திரும்பப் பெறப்படுவதாக கனடா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அவற்றை சாப்பிடவேண்டாம் என்றும், அவற்றை சாப்பிட்டால் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை அவை ஏற்படுத்தலாம் என்றும் கனடா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆகவே, அவற்றை தூர எறியவோ அல்லது வாங்கிய இடத்திலேயே திருப்பிக் கொடுத்துவிடவோ செய்யுமாறு கனடா சுகாதார அமைப்பு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.  

RELATED ARTICLES

Most Popular