Saturday, December 9, 2023
spot_img
Homeஉலகம்அவுஸ்திரேலியாவில் காவல் துறையினரை தாக்க முயன்ற தமிழர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்

அவுஸ்திரேலியாவில் காவல் துறையினரை தாக்க முயன்ற தமிழர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்

அவுஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரிகளை தாக்க முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்

செவ்வாயன்று அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ஆபர்ன் ரயில் நிலையத்தில் 28 வயதான துப்புரவுத் தொழிலாளியை இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது என்ற நபர் கத்தியால் குத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், அதனை தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ஆபர்ன் காவல் நிலையத்திற்கு வந்த முகமது ரஹ்மத்துல்லா சையத், அங்கிருந்து வெளியேறி கொண்டிருந்த இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகளை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் காவல் துறையினரை தாக்க முயன்ற தமிழர்: இறுதியில் சுட்டுக் கொன்ற பொலிஸார் | Indian Man Shot Dead By Australian Cops

இந்நிலையில் முகமது ரஹ்மத்துல்லா சையத் செயலால் ஆத்திரமடைந்த காவல் அதிகாரி ஒருவர் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார், அவற்றில் இரண்டு குண்டுகள் முகமது-வின் மார்பு பகுதியை தாக்கியது என்று காவல்துறை அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  முகமது ரஹ்மத்துல்லா சையத்-திற்கு சம்பவ இடத்திலேயே துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொல்லப்பட்டார் என்றும், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்திய இந்திய தூதரகம்

இதையடுத்து சிட்னியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தால் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டார்.

அவுஸ்திரேலியாவில் காவல் துறையினரை தாக்க முயன்ற தமிழர்: இறுதியில் சுட்டுக் கொன்ற பொலிஸார் | Indian Man Shot Dead By Australian CopsABC

அகமது பிரிட்ஜிங் விசாவில் அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த நிலையில், அவர் மனநல பாதிப்பு கொண்டிருந்தாரா என்று புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில், நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை உதவி ஆணையர் ஸ்டூவர்ட் ஸ்மித், அகமதுவை தவறி வேறு எதுவும் வழியில்லை என தெரிவித்துள்ளார். 

RELATED ARTICLES

Most Popular