Sunday, December 3, 2023
spot_img
Homeசினிமா3 நாளா 3 வேளையும் ஊறுகாய் மட்டும் தான்.. எதிர்நீச்சல் நடிகர் வேதனை

3 நாளா 3 வேளையும் ஊறுகாய் மட்டும் தான்.. எதிர்நீச்சல் நடிகர் வேதனை

3 நாட்களுக்கு ஊறுகாய், தண்ணீர் குடித்து உயிர் வாழ்ந்தேன் ஜி. மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

மாரிமுத்து

தேனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் 2008 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் எனும் படத்தை இயக்கினார். இவர் நடித்த முதல் படம் வாலி. தற்போது எதிர்நீச்சல் எனும் சீரியலில் ஆதிமுத்து குணசேகரன் எனும் கேரக்டரில் நடித்து பிரபலமானார். சமீபத்தில், திருமண மேடையில் மணப்பெண் நடனம் ஆடுவது குறித்து இவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

3 நாளா 3 வேளையும் ஊறுகாய் மட்டும் தான்.. எதிர்நீச்சல் நடிகர் வேதனை | Ethir Neechal Marimuthu About His Bad Experience

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாரிமுத்து, நான் தேனியிலிருந்து சென்னைக்கு வந்த போது ஒரு மேன்ஷனில் தங்கியிருந்தேன்.அங்கிருந்தபடியே ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி வேலை தேடி கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் காசு இல்லாத நேரத்தில் என் நண்பர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்வேன். ஒரு முறை தீபாவளி பண்டிகை வந்தது.

எதிர்நீச்சல்

என் அறையில் இருந்தவர்கள் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். ஊருக்கு போக கூட காசு இல்லாத நிலையில் அறையிலேயே தங்கிவிட்டேன். இதையடுத்து பசித்தது, வழக்கம் போல அக்கவுண்ட் வைத்து சாப்பிடும் ஹோட்டலுக்கு போனேன், அங்கு ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. ஹோட்டலில் சாப்பிடலாம் உடனே வேறு ஹோட்டலில் சாப்பிடலாம் என இருந்த என்னிடம் காசு இல்லை.

சரி மற்ற அறைகளில் இருக்கும் நண்பர்களிடம் வாங்கிக் கொள்ளலாம் என போனேன், அவர்களது அறைகளிலும் பூட்டு இருந்தது. என்னை தவிர எல்லாருமே தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு சென்றுவிட்டார்கள். பசி வயிற்றை கிள்ளியது, என்ன செய்வது என தெரியவில்லை. ஊறுகாய் அறையில் ஏதாவது உலர் உணவுகள் இருக்கிறதா என பார்த்தேன். ஒன்றுமே இல்லை.

வேதனை 

அங்கு ஒரு ஊறுகாய் பாட்டில் மட்டுமே இருந்தது. ஆபத்துக்கு பாவமில்லை என கருதி ஊறுகாயை நக்குவது அதன் காரத்தை குறைக்க ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது, இப்படி 3 வேளையும் 3 நாட்களுக்கு செய்தேன்.

பிறகு 4ஆவது நாள் எனக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தேன். அதற்குள் அறைக்கு நண்பர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் என்னை அழைத்து கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு அங்கு குளுகோஸ் ஏற்றினார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular