லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்த நாளில் இருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஹிமாலய உச்சத்தை தொட்டுவிட்டது.
மாபெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்.

இதில் இயக்குனர் மிஸ்கின் தன்னுடைய காட்சிகளை எடுத்துமுடித்துவிட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு-வில் வருமா என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.
கமல் ஹாசன் நடிக்கிறாரா
அதே போல் கமல் ஹாசன் லியோ படத்தில் நடிக்கிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. லியோ படத்தில் கமல் ஹாசனை நடிக்க வைக்க இதுவரை லோகேஷ் கனகராஜ் முடிவு எடுக்கவில்லையாம்.

200 சதவீதம் கமல் இப்படத்தில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த முடிவை மாற்றி கமலை நடிக்க வைத்தால் கூட ஆச்சிரியப்பட வேண்டாம் என்று கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.