சித்தார்த்- அதிதி
பிரபலங்கள் திருமணம் செய்வதும், விவாகரத்து அதன்பிறகு மறுமணம் என செய்கிறார்கள்.
அப்படி முதல் திருமணத்தில் விவாகரத்து பெற்ற பிரபலங்கள் இருவர் தற்போது காதலித்து வருவதாகவும், விரைவில் இணைய இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன.
அவர்கள் வேறுயாரும் இல்லை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தான், இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, நிறைய புகைப்படங்கள் எடுப்பது என இருக்கிறார்கள்.
அண்மையில் அதிதியின் பிறந்தநாளுக்கு கூட கியூட்டான புகைப்படம் வெளியிட்டு வாழ்த்தினார் சித்தார்த்.
ரீல் வீடியோ
தற்போது சித்தார்த் மற்றும் அதிதி சூப்பர் ஹிட்டான டம் டம் பாடலுக்கு நடனம் ஆடி ரீல் வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.