Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைகனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்!

 யாழ்ப்பாணம் அனலைதீவில் தங்கியிருந்த கனடா பிரஜைகளின் இல்லத்திற்குள் நுழைந்த வாள்வெட்டு குழு பெருந்தொகைப் பணதை  கொள்ளையிட்டதுடன் கனடாப் பிரஜை மீதும் வாள்வெட்டு மேற்கொண்டுள்ளனர்.

கனடாவில், இருந்து கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னர் அனலைதீவிற்கு சென்ற குடும்பம் தமது வீடு புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 கடவுச் சீட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளை

இந்நிலையில் வீட்டிற்குள் 12 மணியளவில் கதவை உடைத்து உட்புகுந்த நால்வர் அடங்கிய கும்பலே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு 3 ஆயிரம் டொலர் மற்றும் கடவுச் சீட்டு உட்பட்ட பெறுமதியான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வாள் வெட்டிற்கு இலக்கானவரின் வீட்டில் அயலில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் இரு ஆசிரியர்களும் கனடாவில் இருந்து வந்தவரது மனைவியும் தங்கியிருந்த சமயம், நள்ளிரவு முகங்களை கறுப்புத் துணியால் மூடியவாறு 4 நான்குபேர் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்! | What Happened To Those Who Went Jaffna From Canada

வீட்டில் தங்கியிருந்த ஆசிரியர்களை கட்டி வைத்துவிட்டு கனடாப் பிரஜையினை வாளால் வெட்டியதோடு கனடா கொண்டு செல்ல தயார் செய்யப்பட்ட பொதிகளையும் சேதப்படுத்தி கனடா பிரஜைகளின் உடமைகளை சல்லடைபோட்டு தேடியுள்ளனர்.

இதன்போதே 2 ஆயிரம் கனேடிய டொலர், ஆயிரம் அமெரிக்க டொலருடன் இலங்கை நாணயம் மற்றும் கடவுச் சீட்டையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்தவரை அதிகாலையில் படகுமூலம் ஊர்காவற்றுறை கொண்டுவந்து அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular