இந்திய சினிமாவின் டாப் நடிகர்கள் வரிசையில் இருப்பவர் தான் அஜித் குமார். கடந்த மாதம் இவர் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானது.
இதையடுத்து இவரின் 62 வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AK 62 படத்தின் வில்லன்
இந்நிலையில் AK 62 படத்தில் அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் மற்றும் அருள் நிதியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இருப்பினும் அருண் விஜய், அருள் நிதி ஆகியோர் ஹீரோவாக வலம் வரும் நிலையில் அஜித்திற்கு வில்லனாக நடிப்பார்களா என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தில் அருண் விஜய் மிரட்டல் வில்லனாக நடித்திருப்பார். இவர் இப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
