Saturday, December 9, 2023
spot_img
Homeவிளையாட்டுரசிகர்களின் இதயத்தை நொறுக்கிய ரன்அவுட்! உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய இந்தியா

ரசிகர்களின் இதயத்தை நொறுக்கிய ரன்அவுட்! உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய இந்தியா

மகளிர் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

முதல் அரையிறுதி போட்டி

கேப்டவுனில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதின. முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக மூனே 54 ஓட்டங்களும், லன்னிங் 49 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதன் பின்னர் கைகோர்த்த கேப்டன் ஹர்மன் ப்ரீத் மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸ் இருவரும் அவுஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 43 (24) ஓட்டங்கள் எடுத்த ஜெமிமா அவுஸ்திரேலிய கீப்பர் ஹீலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

திருப்புமுனை ரன்அவுட்

எனினும் ஹர்மன் ப்ரீத் களத்தில் இருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 15வது ஓவரில் அவர் ரன் அவுட் ஆனார். 34 பந்துகளை எதிர்கொண்ட அவர் 52 ஓட்டங்கள் எடுத்தார்.

அவர் ரன் அவுட் ஆன விதம், ஒருநாள் உலகக்கோப்பையில் டோனி ரன் அவுட் ஆனதை நினைவுபடுத்தியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர். ஹர்மன் ப்ரீத்தின் ரன்அவுட் நேற்றைய போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது.

அவுஸ்திரேலியா வெற்றி

பின்னர் வந்த வீராங்கனை வெற்றிக்காக போராடிய நிலையில், 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அவுஸ்திரேலியாவின் அஷ்லேக் மற்றும் டர்சி பிரவுன் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 7வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  

RELATED ARTICLES

Most Popular