Sunday, December 3, 2023
spot_img
Homeஉலகம்கடுமையான குளிர் தொடர்பில் எச்சரிக்கை

கடுமையான குளிர் தொடர்பில் எச்சரிக்கை

 கனடாவில் கடுமையான குளிர் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

கடுமையான குளிர் தொடர்பில் எச்சரிக்கை | Another Canada S Temperature Flip Flopa

கனடாவின் அநேகமான பகுதிகளில் அசாதாரணமான குளிருடனான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்ட்டா, சஸ்கட்ச்வான், மானிடோபா, வடக்கு ஒன்றாரியோ, கியூபெக், நியூபவுன்ட்லாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான குளிர் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

னுனாவட் பகுதியில் மறை 55 பாகை செல்சியஸ் அளவிலும், அல்பர்ட்டாவில் மறை 40 பாகை செல்சியஸ் அளவிலும் குளிருடனான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ உள்ளிட்ட சில மாகாணங்களில் பனிப்புயல் வீசி வரும் நிலையில், இந்த குளிருடனான காலநிலை மேலும் மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறெனினும், வார இறுதி நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular